லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை திருத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 334 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 12.5 கிலோகிராம் எடைகொண்ட லிட்ரோ எரிவாயுவின் புதிய விலை 4,743 என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 5 கிலோகிராம் எடைகொண்ட சமையல் எரிவாயுவின் விலை 134 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 1,904 ரூபாவாகும்.
இதேவேளை, 2.3 கிலோகிராம் எடைகொண்ட சமையல் எரிவாயுவின் விலை 61 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அதன் புதிய விலை 883 ரூபாவாகும்.
No comments: