துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்கத்தை தொடர்ந்து சென்னையில் நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்கத்தை தொடர்ந்து சென்னையில் நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கங்களால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.
அங்கு தற்போது வரை மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே இந்தியாவின் பல பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
அதன்படி உத்தரகாண்ட், டெல்லி, நேபாளம் உட்பட பல இடங்களில் நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது.
இதனால் மக்கள் பீதி அடைந்து வீடுகள் மற்றும் கட்டிடங்களை விட்டு வெளியேறினர்.
இந்த நிலையில் இன்று (22) பிற்பகல் சென்னையில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. சென்னை அண்ணாசாலையில் உள்ள கட்டிடங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அலுவலகங்களில் பணியாற்றிக்கொண்டிருந்த ஊழியர்கள் அலுவலகங்களை விட்டு வெளியேறினர்.
இதை அடுத்து மெட்ரோ ரயில் பணியினால் கட்டிடத்தில் அதிர்வு ஏற்பட்டிருக்குமோ என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை நடத்தியதில் மெட்ரோ ரயில் பணிகளால் நில அதிர்வு ஏற்படவில்லை என மெட்ரோ பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிரியா, துருக்கியை தொடர்ந்து டெல்லி, நேபாளம், உத்தரகாண்ட், இலங்கை உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது சென்னையும் இணைந்திருப்பது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது
No comments: