தென்னிலங்கையில் உள்ள அரசாங்க மருத்துவமனை ஒன்றிற்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க சிங்கள மருத்துவர் மறுத்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
அதோடு சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவர் சிறுவனையும் தந்தையையும் கடுமையான வார்த்தைகளால் திட்டியும் உள்ளார்.
அதுமட்டுமல்லாது சிறுவனின் தந்தையார் மிகப்பொறுமையுடன் மருத்துவருடன் உரைஉஆடிய நிலையில், மருத்துவர் அவரை பிடித்து தள்ளுவதையும் அவதானிக முடிகின்றது.
இந்நிலையில் குறித்த மருத்துவரின் இந்த செயலுக்கு கடும் கண்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதோடு சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சு மருத்துவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைத்தளங்கள் ஊடாக பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments: