லண்டனை சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய சிதையை குடும்பத்தினர் உண்ண வேண்டும் என்பதை கடைசி ஆசையாக கொண்டிருந்தார் என்பது ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்திருக்கிறது.
அந்த நபரது சிதை அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு தட்டில் வைத்து பராமரிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இங்கிலாந்தில் நரமாமிசம் சாப்பிடுவது சட்டவிரோதமான செயல் என்பதால் அந்த நபரின் சிதையை சாப்பிட பிரிட்டன் அரசு அதிகாரிகள் அனுமதிக்காததோடு இதன் மீது ஏதேனும் முயற்சித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கவும் செய்திருக்கிறார்களாம்.
இதேபோல மற்றொரு நபரிடம் ஆய்வு நடத்தியதில் அவர் தன்னை சவப்பெட்டியில் ஏற்றும் போது சான்ட்டா க்ளாஸ் போல அலங்கரிக்க வேண்டும் என்றாராம். மற்றொருவர் தனது சவப்பெட்டியின் மீது மண், கற்களுக்கு பதில் இனிப்புகளை அள்ளி வீச வேண்டும் என்றும் துக்கம் அனுசரிப்பவர்கள் ஹனி மான்ஸ்டரை போல உடையணிந்து வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
No comments: