சமூர்த்தி பெறுகின்றவர்கள் அனைவருக்கும் சுயதொழில் வாய்ப்பொன்றை ஏற்படுத்திக்கொடுப்பது சம்மந்தமான கலந்துரையாடலும் 2023 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சிமன்றத் தேர்தலை முன்னிட்டு மகளிர் சந்திப்பும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பின் ஸ்தாபகத் தலைவரும், கல்முனை மாநகர பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர் தலைமையில் அவரது உத்தியோக பூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ரஹ்மத் மன்சூர் அவர்கள் உரையாற்றுகையில் சமூர்த்தி பெறுகின்றவர்கள் அனைவருக்கும் சுயதொழில் வாய்ப்பொன்றை ஏற்படுத்திக்கொடுப்பது சம்மந்தமாக உரையாற்றிவிட்டு மகளிர்களின் குறைநிறைகள் சம்மந்தமாக கேட்டறிந்துகொண்டதுடன் எதிர்காலங்களில் தன்னால் இயலுமான உதவிகளைச் செய்வதாகவும் இதன்போது தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அவுஸ்திரேலிய முஸ்லிம் கவுன்சிலின் தலைவியும், சட்டத்தரணியுமான மர்யம் மன்சூர் நலிமுதீன், மேலும் அதிதிகளாக யூ.எல். நெளபர் மற்றும் எம்.இஸட்.எம். ஜெளபர் அவர்களும், ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பின் உறுப்பினர்கள், ஊர்மக்கள் என மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.
நூருல் ஹுதா உமர்
No comments: