நேபாளத்தில் விமானம் விபத்துக்குள்ளாவதற்கு சில நொடிகள் முன்னர் பதிவான காட்சிகள் அடங்கிய காணொளியொன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
யெட்டி விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று நேற்று (15.01.2023), 68 பயணிகள், 4 விமானப் பணியாளர்கள் என 72 பேருடன் நேபாளத்தில் உள்ள போக்கரா விமான நிலையத்தில் தரையிறங்கச் சென்றது.
அப்போது, விமானம் திடீரென தரையில் விழுந்து தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த விபத்தில், 68 பேர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த விமானத்தில் பயணித்த பயணியொருவர் விமானம் தரையிறங்கும் காட்சியை சமூக வலைத்தளத்தில் நேரலை செய்து கொண்டிருத்த போதே விமானம் விபத்திற்குள்ளாகியுள்ளது.
எனவே குறித்த நேரலையில் விபத்து இடம்பெறுவதற்கு இறுதி சில விநாடிகளுக்கு முன்னர் வரையான காட்சிகள் பதிவாகியுள்ளன.
இதற்கமைய நேபாளத்தில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், நேபாளத்தில் இடம்பெற்ற விமான விபத்து குறித்து விசாரணை அறிக்கையை 45 நாட்களுக்குள் ஒப்படைக்குமாறு நேபாள நாட்டு பிரதமர் புஷ்பா கமல் தஹல் உத்தரவிட்டுள்ளார்.இந்த நிலையில் தற்போது இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments: