News Just In

1/05/2023 12:26:00 PM

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பிலான அறிவுறுத்தல்கள் காட்சிப்படுத்தல்.





ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபையின் தவிசாளர், துணைத் தவிசாளர் மற்றும் உறுப்பினரகளைத் தேர்ந்தெடுக்கும் நோக்கத்திற்காக வாக்கெடுப்பொன்றை நடாத்துவதற்காக உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் 26 ஆம் பிரிவின் கீழ் இத்தால் அறிவிக்கப்படுகின்றது.

என மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் சார்பாக 04.01.2023 அன்று உதவித் தெரிவத்தாட்சி அலுவலர் மட்டக்களப்பு மாவட்டம், மற்றும் தெரிவத்தாட்சி அலுவலர் மண்முனை தென் எருவில்பற்று பிரதேசசபையின் எம்.பி.எம்.சுபியானின் கையொப்பம் இடப்பட்ட விளக்கங்கள் அடங்கிய கடிதங்கள் தமிழிலும், சிங்களத்திலும், காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது…

அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் அல்லது கணக்கிடப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சியொன்றாகவோ, சுயேச்சைக் குழுவொன்றாகவோ போட்டியிடுவதற்கு எண்ணுகின்ற யாரேலும் நபர்களைக் கொண்ட குழுவொன்று காணப்படுமாயின் உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் 29வது பிரிவின் பால் அவர்களது கவனம் ஈர்க்கப்படுகின்றது. அப்பிரிவின் பிரகாரம், அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சியொன்று தொடர்புடையதாயின் அரசியற் செயலாளர் அவரால் அதிகாமளிக்கப்பட்ட முகவர் மேற்கூறப்பட்ட தேர்தலுக்காக பெயர்குறித்த நியமனங்கள் செய்யப்படவேண்டிய ஒவ்வொரு வேட்பாளர் தொடர்பாகவும் ஆயிரத்து ஐந்நூறு ரூப (1,500) அல்லது சுயேச்சைக் குழுவாயின் ஒவ்வொரு கயேச்சைக் குழுவின் குழுத்தலைவர் அல்லது அவரால் அதிகாரமளிக்கப்பட்ட முகவர் மேற்கூறப்பட்ட தேர்தலுக்காக பெயர் குறித்த நியமனங்கள் செய்யப்பட வேண்டிய ஒரு வேட்பாளருக்காக ஐயாயிரம் ரூபா (ரூபா 5000) வீதம் தொகையைத் தெரிவத்தாட்சி அலுவலருக்கு இவ்வறிவித்தல் பிரகடனப்படுத்தப்பட்ட தினம் மற்றும் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படும் இறுதி நாளுக்கு முன்னைய தினம் 20123 ஜனவரி மாதம் 20ஆம் திகதி நண்பகல் 12.00 மணிவரையான காலப்பகுதிக்குள் வைப்புச் செய்யப்படல் வேண்டும்.

(இக் காலப்பகுதியின் இடைப்பட்ட நாட்களான 2023.01.06 போயா தினம், 2023.01.08 மற்றும் 2023.01.15 ஆகிய ஞாயிறு தினங்களில் வைப்புப் பணம் வைப்புச் செய்ய முடியாது என்பதுடன், 2023 ஜனவரி மாதம் 20ஆம் திகதி மதியம் 12.00 மணிவரையும் ஏனைய தினங்களில் அலுவலக நேரத்தில் வைப்புப் பணம் வைப்புச் செய்ய முடியும்) மேற்குறிப்பிட்ட சடையின் வாக்கெடுப்பு தொடர்பாக வைப்புச் செய்யப்பட வேண்டியுள்ளதாக அத்தொகையை அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சியொன்று தொடர்பாகவுள்ள போது முப்பத்து நான்காயிரத்து ஐந்நூறு (ரூபா 34500.00) என்பதோடு கணக்கிடப்பட்ட ரூபா

நியமனக் கால எல்லை 2023 ஜனவரி மாதம் 18 ஆம் திகதி தொடக்கம் 2023 ஜனவரி மாதம் 21 ஆம் திகதி நண்பகல் 12.00 மணியுடன் முடிவடையும், பெயர் குறித்த நியமனப் பத்திரம், நியமனக் காலப் பகுதியிலுள் அலுவலக நேரத்தினுள் மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் என்னால் ஏற்றுக் கொள்ளப்படும்.

குழுவொன்றெனில் ஒரு இலட்சத்து பதினைந்தாயிரம் ரூபா (ரூபா 115000.00) ஆகும், முடிவடைவதற்கு முன்னர் உரிய படிவத்திலான பெயர்குறித்த நியமனப்பத்திரத்தை நியமனக் காலப்பகுதி தெரிவத்தாட்சி அலுவலரிடமிருந்து கட்டணமின்றிப் பெற்றுக்கொள்ள முடியும்.

நியமனக் காலப்பகுதியின் இறுதிநாள் நண்பகல் 12.00 மணிக்கும் பிற்பமல் 130 மணிக்கும் இடையில் தெரிவத்தாட்சி அரசியற் அலுவலருக்கு கையளிக்க ஆட்சேபனைகளைத் கட்சிகளுக்காக முடியுமென்பதோடு அங்கீகரிக்கப்பட்ட அனுமதிக்கப்பட்ட சின்னங்கள் மற்றும் சுயேச்சைக் குழுக்காக அனுமதிக்கப்பட்ட சின்னங்கள் மற்றும் வேறுபிரித்தறியும் இலக்கங்கள் 2023 ஜனவரி மாதம் 21ஆம் திகதிபிற்பகல் 1.30 மணியின் பின்னர் மட்டக்களப்பு மாவட்ட கேட்போர் கூடத்தில் என்னால் குறித்தொதுக்கி வழங்கப்படும். என அதில் மேலம் குறிப்பிடப்பட்டுள்ளது.



No comments: