ஓய்வுபெற்ற தொடருந்து ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் மீள இணைத்துக் கொள்வது தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொடருந்து பொது முகாமையாளர் டபிள்யூ.ஏ.டி.எஸ். குணசிங்க தெரிவித்துள்ளார்.
தொடருந்து திணைக்களத்தின் அதிகாரிகளுக்கும் அரச சேவைகள் ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்களுக்கும் இடையிலான கலந்துரையாடலுக்கமைய இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 31ஆம் திகதி தொடருந்து திணைக்களத்தில் பணியாற்றிய 450 ஊழியர்கள் ஓய்வு பெற்றதை தொடர்ந்து நிலவிய வெற்றிடத்திற்கே குறித்த ஊழியர்கள் மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
ஓய்வு பெற்ற 450 தொடருந்து ஊழியர்களில் 400 ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் இணைத்துக்கொள்ள திட்மிட்டுள்ளதாக தொடருந்து திணைக்களத்தின் பொது முகாமையாளர் டபிள்யு ஏ.டீ.எஸ் குணசிங்க தெரிவித்துள்ளார்.
No comments: