News Just In

1/08/2023 08:15:00 PM

ஒரே நொடியில் 40 பேர்களின் உயிரைப் பறித்த கோர விபத்து!

செனகல் நாட்டில் இரண்டு பேருந்துகள் ஒன்றாக மோதிக்கொண்ட விபத்தில் மொத்தம் 40 பயணிகள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விபத்தில் 115 பேர்கள் காயங்களுடன் தப்பியதாகவும், இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மத்திய செனகலில் உள்ள காஃப்ரைன் மற்றும் தம்பா இடையே இந்த கோர சம்பவம் நடந்துள்ளது.
பேருந்துகளில் ஒன்று மற்றொன்றின் பக்கவாட்டில் மோதியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மொத்த நாட்டையும் உலுக்கிய கோர விபத்தால் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சாலை பாதுகாப்பு தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வரும் நாட்களில் அதிகாரிகள் கூட்டங்களை முன்னெடுப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தம்பாவில் இருந்து பயணித்த பேருந்து, டக்காரில் இருந்து பயணித்த பேருந்து மீது மோதியது என்றே முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விபத்தில் சிக்கிய பேருந்துகள் சம்பவயிடத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு, தற்போது போக்குவரத்து சீராக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.


No comments: