News Just In

11/11/2022 03:31:00 PM

சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி செய்ய தயாராகும் வாழைப்பழம்





உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் வாழைப்பழங்களின் முதலாவது சரக்குகளை எதிர்வரும் நவம்பர் மாதம் சர்வதேச சந்தைக்கு இலங்கை ஏற்றுமதி செய்யும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

புளி வாழைப்பழங்களின் முதல் சரக்கு நவம்பர் 26, 2022 அன்று துபாய் சந்தைக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

12,500 கிலோ புளி வாழைப்பழத்தை துபாய் சந்தைக்கு விடுவிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியைத் தணிக்கும் வகையில் அன்னியச் செலாவணியை ஈட்டும் நோக்கில் ராஜாங்கனை புளிப்பு வாழைத் திட்டம் 200 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ளது.

இதேவேளை, டுபாய்க்கு வாராந்தம் புளி வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் பணிப்பாளர் கலாநிதி ரொஹான் விஜேகோன் தெரிவித்துள்ளார்.



No comments: