News Just In

11/11/2022 03:23:00 PM

ராஜீவ் கொலை வழக்கில் நளினி உட்பட அறுவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்றம் வழங்கியுள்ள அதிரடி உத்தரவு




நளினி மற்றும் ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார்.இந்த வழக்கில் பிறப்பித்த உத்தரவு குற்றம்சாட்டப்பட்ட மற்ற 6 பேருக்கும் பொருந்தும் என உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ஆறு பேரை விடுதலை செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி முடிவு எடுக்கவில்லை.இந்நநிலையில், தமிழ்நாடு அரிசின் பரிந்துரையின் பேரில் உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயனபடுத்தி நளினி உள்ளிட்ட அறுவரை விடுதலை செய்ய அதிரடி உத்தரவு வழங்கியுள்ளது.



முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுக்கும் மேலாக நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், பேரறிவாளன் ஆகியோர் சிறையில் இருந்தனர்.

முன்னாள் பிரதமர் ராஜிவ், சென்னை அருகே ஸ்ரீபெரும்புதுாரில் 1991ல் வெடிகுண்டு வைத்து கொல்லப்பட்டார். இதில், அவருடன் இருந்த பொலிஸ் அதிகாரிகள் உட்பட 21 பேர் பலியாகினர்.இந்தப் படுகொலை சம்பவத்தில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த விடுதலைப் புலிகள் அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் பேரறிவாளன், நளினி, ரவிசந்திரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, 1999ல் துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின், கருணை மனு பரிசீலிக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

இதில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு இருந்த பேரறிவாளன் சில மாதங்களுக்கு முன் கடந்த மே மாதம் 18ம் திகதி உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து சிறையிலுள்ள தங்களை விடுவிக்கக்கோரி நளினி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
குறித்த மனுவில் ஏற்கனவே உச்சநீதிமன்றத்தால் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட காரணங்களை மேற்கோள்கட்டி தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுகொண்டுள்ளனர்.

இந்த வழக்கில் தமிழநாடு அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில்,இந்த விவகாரத்தில் நீதிமன்றம் எந்த உத்தரவு பிறப்பித்தாலும் தமிழக அரசு அதற்கு கட்டுப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர் கவாய், நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வழக்கு இன்று விசாரணைக்கு வந்துள்ளது.

No comments: