News Just In

11/11/2022 04:43:00 PM

நமது ரத்தம் வகைப்படுத்தப்படுவது எப்படி தெரியுமா?




நமது ரத்தத்தில் சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், ரத்த தட்டுகள், பிளாஸ்மா ஆகியவை உள்ளன. ரத்தத்திலுள்ள ஆன்டிஜென்கள் அடிப்படையில் ரத்தவகை பிரிக்கப்படுகிறது.

இதுவரை நான்கு அடிப்படை ரத்த குரூப்கள் கண்டறியப்பட்டுள்ளன. ‘ஏ’ குரூப்பில் சிவப்பணுக்களில் ஏ புரதமும், பிளாஸ்மாவில் பி ஆன்டிபாடியும் (antibody) இருக்கும். ‘பி’ குரூப்பில் மேற்சொன் னது மாறி இருக்கும். ‘ஏ,பி’ குரூப்பில் சிவப்பணுக்களில் ‘ஏ,பி புரதம்’ இரு அணுக்களிலும் உண்டு; ஆனால் பிளாஸ்மாவில் ஏ அல்லது பி இருக்கும். ‘ஓ’ குரூப்பில் ஏ அல்லது பி புரதம் சிவப்பணுக்களிலும், பிளாஸ்மாவில் இரு ஆன்டிபாடிகளும் இருக்கும்.

இதில் கூடுதலாக உள்ள புரதத்தை (Rh) வைத்து ரத்தவகை பாசிட்டிவ், நெகட்டிவ் என பிரிக்கிறார்கள். ஏ பி நெகட்டிவ் மிகவும் அரிய ரத்த வகை. உலகில் ஏ பி நெகட்டிவ் 0.6 சதவிகிதம் பேருக்கு மட்டுமே (தோராயமாக 167 பேரில் ஒருவருக்கு) உள்ளது. ஏ பி பாஸிட்டிவ் ரத்த வகை 3.4% பேருக்கும் உள்ளது

No comments: