News Just In

11/08/2022 02:31:00 PM

பேராளர் மாநாட்டில் பங்கு கொள்ள விடாமல் தடுத்தது கட்சிக்கும் சமூகத்திற்கும் செய்த துரோகமும் அநியாயமுமாகும் !மட்டக்களப்பு போராளிகள்





-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாட்டுக்கு மட்டக்களப்பிலிருந்து சென்றவர்களை மாநாட்டில் பங்குபற்ற விடாமல் வாயிற் கதவில் வைத்துத் தடுத்து நிறுத்தியமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் சமூகத்திற்கும் செய்த துரோகமும் அநியாயமுமாகும் என மட்டக்களப்பு – ஏறாவூர்> ஓட்டமாவடி ஆகிய பிரதேசங்களிலிருந்து புத்தளம் சென்ற அதிருப்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாடு அக்கட்சியின் தலைவர் றவூப் ஹக்கீம் தலைமையில் புத்தளம் கே.ஏ. பாயிஸ் ஞாபகார்த்த மண்டபத்தில் திங்கள்கிழமை 07.11.2022 இடம்பெற்றது.

இந்த நாட்டில் கலந்து கொள்ள நாடளாவிய ரீதியில் இருந்து அக்கட்சியின் ஆதரவாளர்கள்> போராளிகள்> பிரமுகர்கள் உள்ளிட்டோர் புத்தளம் சென்றிருந்தனர்.

அவ்விதம் மட்டக்களப்பு - ஏறாவூர் ஓட்டமாவடி ஆகிய பிரதேசங்களிலிருந்து ஏறாவூர் நகர சபையின் முன்னாள் தவிசாளர்களான ஏ. அப்துல் நாஸர் மற்றும் எம்.ஐ. தஸ்லீம் ஆகியோரின் தலைமையில் சென்ற சுமார் 40 பேரும் உள்ளடங்குகின்றனர்.


எனினும்> இவர்கள் மாநாட்டு மண்டபத்திற்குள் உள்நுழையச் சென்றபோது வாயிலில் வைத்து உங்களை அனுமதிக்க தலைமைப் பீடம் அனுமதி வழங்கவில்லை என்ற காரணம் கூறப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டார்கள்.

அதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் அதிருப்பதியாளர்களான மட்டக்களப்பு பிரதேச ஸ்ரீலங்கா முஸ்லிம் கட்சி ஆதரவாளர்கள் ஊடகங்களிடம் தமது அதிருப்தியை வெளியிட்டனர்.

அதில் தெரிவிக்கப்பட்டதாவது> இந்தக்கட்சி எப்போது ஆரம்பிக்கப்பட்டதோ அப்பொழுதிருந்து நடைபெறும் ஒவ்வொரு பேராளர் மாநாடுகளிலும் நாம் பங்குபற்றியிருக்கின்றோம். ஆனால். இம்முறைதான் எங்களுக்கு கதவடைப்பு நடந்திருக்கிறது. நாம் இந்தக் கட்சியை வளர்க்க பல தியாகங்களைச் செய்து பாடுபட்டவர்கள். ஆனால்> இப்பொழுது நாம் வெளியில் நிற்கின்றோம் அதேவேளை இந்தக் கட்சியை வளர விடக் கூடாது என்பதில் தீவிரமாகச் செயற்பட்டு இந்தக் கட்சியை அழிப்பதற்காக வேறு பல கட்சிகளில் இருந்து செயற்பட்டவர்கள்இன்று கட்சித் தலைமையால் கனவான்களாகப் போற்றப்பட்டு இப்பொழுது கட்சிக்குள்ளே கௌரவ விருந்தினர்களாக உள்ளார்கள். நாம் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றோம்.

கடந்த தேர்தலில் நேரடியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ{க்கென நாடளாவிய ரீதியில் ஒரேயொரு ஸ்தானத்தைப் பெற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தனித்துவத்தையும் தன்மானத்தையும் பாதுகாத்தது மட்டக்களப்பு மாவட்டம்.



அதில் தெரிவான கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய சுற்றாடல் அமைச்சருமான கட்சியின் பிரதித் தவிசாளர் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை எடுத்து பிரதேச மக்களுக்கும் நாட்டுக்கும் சேவையாற்றப் புறப்பட்டமைக்காக கட்சியின் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு வழக்கை எதிர்கொள்கிறார்.

மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள் பல வழிகளிலும் சொல்லவொண்ணா நெருக்கடியை எதிர்கொள்ளும்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தனித்துவத்தைக் காத்த அந்தப் பிரதேச முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்கள் புறந்தள்ளப்பட்டமை துரோகமும் அநீதியுமாகும்” என்றனர்.





No comments: