News Just In

10/17/2022 08:17:00 PM

விலை குறைப்பு தொடர்பில் லங்கா ஐஓசியின் புதிய அறிவிப்பு




லங்கா IOC நிறுவனமும் இன்று (17) இரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் விலை குறைப்பிற்கு அமைவாக இந்த விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லங்கா ஐஓசி விலை திருத்தம்

அதனடிப்படையில் 92 ஒக்டோன் பெட்ரோலின் விலை 40 ரூபாவினாலும், ஒட்டோ டீசலின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய விலை திருத்தத்தின்படி, 92 ஒக்டோன் பெட்ரோலின் விலை 370 ரூபாவாகவும், ஒட்டோ டீசலின் விலை 415 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகதெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: