News Just In

10/13/2026 05:44:00 AM

சிறுமியை அடக்கம் செய்ய முயற்சித்த குடும்பத்தினர்; திடீரென எழுந்து தண்ணீர் கேட்டதால் அதிர்ச்சி

சிறுமியை அடக்கம் செய்ய முயற்சித்த குடும்பத்தினர்; திடீரென எழுந்து தண்ணீர் கேட்டதால் அதிர்ச்சி



சிறுமியை அடக்கம் செய்ய முயற்சித்த குடும்பத்தினர் திடீரென எழுந்து தண்ணீர் கேட்டதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள குவாட்டமாலா நாட்டைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் சம்பவத்தன்று திடீரென நெஞ்சு வலியால் மயங்கி கீழே விழுந்தார்.

இதனைக்கண்ட அவரது தந்தை சிறுமியை தனது காரில் மருத்துவமனைக்கு அவசர அவசரமாக அழைத்துச்சென்றார். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே, சிறுமியின் சுவாசம் மற்றும் நாடிதுடிப்பு நின்று விட்டது என அவரது தந்தை முடிவு செய்தார்.

இதனையடுத்து சிறுமியை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். அடக்கம் செய்வதற்காக சிறுமியை ஒரு சவப்பெட்டியில் வைத்துள்ளனர்.

இந்த நிலையில், சுமார் 8 மணி நேரம் கழித்து சிறுமி திடீரென கண்விழித்து குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளார். சடங்கில் கலந்துகொண்ட உறவினர்களும் கிராம மக்களும் இதைப் பார்த்து பெரும் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்தனர்.

சிலர் இது கடவுளின் அற்புதம் என்று வழிபாடுகளைச் செய்யத் தொடங்கினர். மற்ற சிலர் உடனடியாக அந்தப் பெண்ணுக்கு உதவுவதற்காக அருகில் சென்று, அவருக்குக் குடிப்பதற்குத் தண்ணீர் கொடுத்துச் சவப்பெட்டியிலிருந்து பத்திரமாக வெளியே மீட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தீவிரமாக பரவி வருகிறது. உயிருடன் உள்ள சிறுமியை இறந்து விட்டதாக நினைத்து, குடும்பத்தினர் அடக்கம் செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

No comments: