News Just In

10/08/2026 06:32:00 PM

ரஷ்ய நாட்டைச் சேர்ந்தகர்ப்பித்ணித் தாயைகடல் அலைகளில் பாய்ந்து காப்பாற்றிய இலங்கை வாலிபன்!

ரஷ்ய நாட்டைச் சேர்ந்தகர்ப்பித்ணித் தாயைகடல் அலைகளில்  பாய்ந்து காப்பாற்றிய இலங்கை வாலிபன்

இலங்கைக்கு சுற்றுலாப் பயணியாக வந்த ரஷ்ய நாட்டைச் சேர்ந்த கர்ப்பிணி தாய் லீலா (Leela) அம்பலாங்கொடை கடற்கரையில் குழந்தையுடன் சுவாரஸ்யமான விளையாட்டுகளில் ஈடுபட்டு அதில் மூழ்கியிருந்தார்.
ஆனால், அவருக்கே தெரியாமல் கடல்
அலை கொடூரமாக கரையிலிருந்து வெகு தொலைவிற்கு ஆழ்கடலை நோக்கி இழுத்துச் சென்று விட்டது
நொடியில் நிலைமை பயங்கரமாக தலைகீழாக மாறியது.அவ்வளவு தூரம் கடல் அவைகளுக்கும் ஊடுருவி இந்த
வாலிபன் இந்த கர்ப்பிணித்
தாயையும் சிசுவையும்
துணிகரமாக காப்பாற்றியுள்ளார்
ஹோட்டல் ஒன்றில் மதிய உணவை அருந்திக் கொண்டிருந்த சஞ்சீவ குமார ஒரு வினாடி கூட தாமதிக்கவில்லை! தான் சாப்பிட்டுக் கொண்டிருந்த உணவை ஒதுக்கி விட்டு தனது நீச்சல் திறமையால் அலைகளுக்குள்
ஊடுருவி இவர்களை காப்பாற்றிய துணிகர சம்பவம் இன்று வலை தளங்களில் பாராட்டிப் பேசப்படுகிறது.
இந்த நன்றி கடனுக்காக வயிற்றில் சிசுவை சுமந்த அந்த பெண் இந்த வாலிபனை கட்டிப்பிடித்து அழும் காட்சி மிகவும் உருக்கமாக இருக்கிறது
லீலாவின் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடியது.
சஞ்சீவவின் கூர்மையான பார்வையில் லீலா படாமல் இருந்திருந்தால்
அல்லது அவன் உணவின் சுவையில். மூழ்கி இருந்திருந்தால் இன்று இந்த ரஷ்யத் தாயும் அவளது வயிற்றில் சுமந்து குழந்தையும்
உயிரோடு.இருந்திருக்க வாய்ப்பில்லை
இறுதியாக நாளை பிறக்கும் இந்த குழந்தைக்குச் சொல்வதற்கு ஒரு அற்புதமான கதை லீலாவிடம் உள்ளது
அவள் இன்னும் ஒரு முறை இல்லை பலமுறை மீண்டும் தன் குழந்தையுடன் இலங்கைக்கு வருவாள்
சஞ்சீவுக்கும் இலங்கை மண்ணுக்கும் நன்றி கூறுவதற்காக.

No comments: