
நூருல் ஹுதா உமர், எம்.என்.எம்.அப்ராஸ்
வை.எம்.எம்.ஏ. பேரவை சாய்ந்தமருது கிளை மற்றும் நியூஸ் கவர்ஸ் இணைந்து வசதிகுறைந்த குடும்பங்களுக்கு உலருணவு வழங்கும் நிகழ்வு வை.எம்.எம்.ஏ. பேரவை சாய்ந்தமருது கிளை செயலாளர் ஊடகவியலாளர் எஸ். அஸ்ரப்கானின் நெறிப்படுத்தலில் வை.எம்.எம்.ஏ. பேரவை சாய்ந்தமருது கிளை தலைவர் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஜி. அன்வர் தலைமையில் இளைஞர் பயிற்சி நிலையத்தில் திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வை.எம்.எம்.ஏ. பேரவையின் தேசிய உப தலைவர் எஸ். தஸ்தகீர் விசேட பேச்சாளராக கலந்துகொண்டு வை.எம்.எம்.ஏ. பேரவையின் செயற்பாடுகள், கடந்து வந்த பாதைகள், வேலைத்திட்டங்கள், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துரைத்தார். நிகழ்வில் பிரபல தொழிலதிபர் எம்.எச்.எம். நாஸர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உலருணவுகளை வழங்கிவைத்தார்.
மேலும் வை.எம்.எம்.ஏ. பேரவையின் கல்முனை கிளை தலைவர், சாய்ந்தமருது கிளை நிர்வாகிகள், கல்முனை கிளை உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
No comments: