News Just In

9/14/2022 01:04:00 PM

ஜனாதிபதி ரணிலின் கடிதம் சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் மூலமாக ஐக்கிய அரபு இராச்சிய அமீரிடம் கையளிப்பு.





- ஏ.எச்.ஏ. ஹுஸைன்

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹ ஐக்கிய அரபு இராச்சியத்தின் அமீருக்கு எழுதியனுப்பிய எழுதிய விஷேட கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் விஷேட தூதுவராக ஐக்கிய அரபு இராச்சியம் சென்றுள்ள சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட்> அந்தக் கடிதத்தை ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிநாட்டு அமைச்சரும் சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பானவருமான மாட்சிமைமிகு அப்துல் பின் ஷெய்யத் அல் நஹ்யானிடம் கையளித்துள்ளார்.

இரு நாடுகளின் உறவுகளைப் பலப்படுத்துவது குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அபூதாபியில் இடம்பெற்ற சந்திப்பில் பல தரப்பு விடயங்கள் குறித்து அமைச்சர் நஸீர் அஹமட்டும், ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிநாட்டு அமைச்சரும் கலந்துரையாடியுள்ளனர்.

இலங்கையின் பொருளாதார மேம்பாடுகளுக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஒத்துழைப்பை பலப்படுத்துவது குறித்தும் தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்தும் விளக்கிய அமைச்சர நஸீர் அஹமட்;> அதற்கான தீர்வுகள் குறித்தும் எடுத்துரைத்து ஐக்கிய அரபு இராச்சியத்தின் உதவிகளை பெறுவது தொடர்பில் அக்கறை செலுத்துமாறும் வேண்டிக் கொண்டார்.

மேலும்> பிராந்திய மற்றும் சர்வதேசத்தில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஒத்துழைப்புக்களுடன் பல்துறைகளில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்திச் செயற்பாடுகள் பற்றியும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

இவ்வாறான விடயங்களுக்கு ஒத்துழைப்பதில் இலங்கைக்குள்ள ஆர்வங்களையும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

இச்சந்திப்பில் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கான இலங்கைத் தூதுவர் மஹாதேவி பீரிஸ{ம் கலந்துகொண்டார்.


No comments: