News Just In

9/07/2022 11:01:00 AM

சம்மாந்துறை மத்திய கல்லூரியில் மாணவர்களுக்கான பொலிஸாரின் விழிப்புணர்வு கருத்தரங்கு!





நூருல் ஹுதா உமர்

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 156 வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு நாடுதழுவிய ரீதியாக பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றுவருகின்றது. அதன் தொடர்ச்சியாக பாடசாலை
மாணவ தலைவர்களுக்கான போதைவஸ்து பாவனையின் தீமைகள் மற்றும் போக்குவரத்து ஒழுங்குகள் தொடர்பில் விழிப்பூட்டும் வேலைத்திட்டமொன்று சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தினால் மேற்கொள்ளப்பட்டது.

சம்மாந்துறை மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) அதிபர் என்.எம். நாசீர் அலி தலைமையில் மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற போதைவஸ்து பாவனையின் தீமைகள் மற்றும் போக்குவரத்து ஒழுங்குகள் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கில் சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பாதிகாரி கே.டி.எஸ்.ஜெயலத் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விழிப்பூட்டினார்.

சம்மாந்துறை பொலிஸ் நிலைய முயற்சினால் சம்மாந்துறை பிரதேசத்தில் கிராமங்கள் தோறும் போதைப் பொருள் பாவனையைத் தடுத்தல் செயற்திட்டமானது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுவரும் இந்த காலத்தில் மாணவர்கள் மத்தியில் இந்த விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றமை சிறப்பம்சமாக அமைந்துள்ளது. இந்த நிகழ்வில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய போக்குவரத்து, சமூக மற்றும் குற்றத்தடுப்பு என பல பிரிவுகளையும் சேர்ந்த பொலிஸார் கலந்து கொண்டிருந்தனர்.




No comments: