News Just In

9/09/2022 10:08:00 AM

பாடசாலைக் கல்வியை இடைநடுவில் கைவிட்ட மாணவர்களை பாடசாலையுடன் மீள் இணைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்.




நூருல் ஹுதா உமர்

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 156வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு 2022.09.03 தொடக்கம் 2022.09.10 ஆம் திகதி வரை பொலிஸ் வாரமாக பிரகடணம் செய்யப்பட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் இறக்காமம் பொலிஸ் நிலையத்தினால் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், சமைய வழிபாட்டு நிகழ்வுகள், நடமாடும் பொலிஸ் திணைக்கள மற்றும் மருத்துவ சேவைகள், மர நடுகை, சிரமதான பணிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் என பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகின்றன.

இத்தொடரில், ஆறாம் நாளான வியாழக்கிழமை இறக்காமம் கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைக் கல்வியை இடைநடுவில் கைவிட்ட மாணவர்களை இனம்கண்டு மீண்டும் பாடசாலையுடன் மீள் இணைக்கும் பொதுக்கள விஜயம் மேற்கொள்ளப்பட்டது. இப்பொதுக்கள விஜயத்தினை, இறக்காமம் பிரதேச செயலகத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவு, பொலிஸ் நிலையம், கோட்டக் கல்வி அலுவலகம் மற்றும் உரிய பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் ஆகியோர் இணைந்து மேற்கொண்டனர்.

நிருவாக உத்தியோகத்தர் ஜே.எம். ஜமீல் தலைமையில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மஹிந்த சேனாரட்ன மற்றும் பொலிஸ் நிலைய நிருவாக பொறுப்பதிகாரி எம்.வை. ஜௌபர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்வேலைத்திட்டத்தின் முதற் கட்டமாக சது/ அல்-அமீன் வித்தியாலயம், சது/அல்-மதீனா வித்தியாலயம் ஆகிய இரு பாடசாலைகளில் இருந்தும் இடைவிலகப்பட்ட மாணவர்களை மீள் இணைப்பதற்கான பொதுக்கள விஜயம் மேற்கொள்ளப்பட்டது.


No comments: