News Just In

8/02/2022 06:51:00 PM

சீரற்ற வானிலை காரணமாக 12 ரயில் சேவைகள் ரத்து!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை தொடரும் மலையகப் பகுதியில் பல பிரதேசங்களில் கனத்த மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு பல அர்த்தங்கள் நிகழ்ந்துள்ளன.

தொடர்ந்து வீதிகளில் ஏற்பட்டுள்ள மண்சரிவு காரணமாக மலையக பகுதிக்கு இடம்பெறும் 12 புகையிரத சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத நிலையத்தில் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதன்படி மலையத்திற்கு 6 சேவைகளும் கொழும்புக்கு 6 சேவைகளுமாக 12 சேவைகள் இரத்தச் செய்யப்பட்டுள்ளன.

கொழும்பு பதுளை பிரதான புகையிரத வீதியில் வட்டவளை, ரொசல்ல, தலவாக்கலை, கலப்பட உள்ளிட்ட பல இடங்களில் பாரிய கற்களும் மண் மேடுகளும் சரிந்து விழுந்துள்ளன.

இதனால் நேற்று முதல் மலையகத்துக்கான புகையிரத சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தற்போது புகையிரத வீதியில் கொட்டிக் கிடக்கும் மண்ணையும் பாரிய கற்களையும் அகற்றும் பணிகளை புகையிரத ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த பணிகள் சீர் செய்யப்பட்ட உடன் புகையிரத சேவைகள் வழமைக்கு திரும்பும் என புகையிரத அதிகாரி மேலும் தெரிவித்தார்.

இன்றைய தினம் புகையிரத சேவைகள் இடம்பெறாத காரணமாக மலையக புகையிரத நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments: