News Just In

7/20/2022 06:22:00 AM

தாய் கிணற்றில் வீசிய சிறுமியை காப்பாற்றிய இரு மாணவர்கள்!

தாய் தனது மூன்று வயது மகளை கிணற்றில் வீசிய போது பாடசாலை மாணவர்கள் இருவர் கிணற்றில் குதித்து அந்த சிறுமியை காப்பாற்றியதாக கரந்தெனிய காவல்துறையினர் தெரிவித்தனர்.

கரந்தெனிய கிரினுவைச் சேர்ந்த குஷினி ஷெஹாரா என்ற மூன்று வயது சிறுமியையே மாணவர்கள் காப்பாற்றியுள்ளனர்.

கிணற்றில் விழுந்து உயிரை காப்பாற்றிய சிறுமி எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

வீட்டில் ஏற்பட்ட பிரச்சினைகளால் மனமுடைந்த இந்த தாய், நேற்று (19) காலை தனது மகளை கிணற்றில் வீசியதாகவும், அவரும் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொள்ளத் தயாராக இருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

கிணற்றில் இருந்து குழந்தையின் அலறல் சத்தத்தை கேட்ட பாடசாலை மாணவர்களான சாமிக்க லக்ஷன் மற்றும் ரொஷான் குமார ஆகியோர் கிணற்றில் குதித்து சிறுமியை மீட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்த மாணவர்கள் இருவரும் கரந்தெனிய பந்துல சேனாதீர கல்லூரியில் கல்வி கற்று வருகின்றனர்.

மகளை கிணற்றில் வீசிய தாயார் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரந்தெனிய காவல் நிலைய பிரதான காவல்துறை பரிசோதகர் பிரஷான் அல்கிரியஹே, குற்றப்பிரிவு நிலைய கட்டளைத் தளபதி காவல்துறை பரிசோதகர் இரான் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை சிறுமியின் உயிரை காப்பாற்றிய மாணவர்களின் செயலுக்கு பலரும் தமது பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.

No comments: