News Just In

7/26/2022 06:23:00 AM

கிராமங்களை மீண்டும் கட்டியெழுப்ப புதிய யுக்தியை கையாளும் உக்ரைன் இளைஞர்கள்!

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் 150 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது.

ரஷ்யாவின் மூர்க்கத்தனமான தாக்குதல்களில் உக்ரைனின் பல நகரங்கள் மற்றும் கிராமங்கள் முற்றிலுமாக சின்னபின்னமாகி கிடக்கின்றன.

இந்நிலையில் ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு மத்தியில் உக்ரைன் இளைஞர்கள் உருக்குலைந்த தங்களின் கிராமங்களை மீண்டும் கட்டியெழுப்பி புதிய யுக்தியை கையாண்டு வருகின்றனர்.

வெடிகுண்டுகளால் தகர்க்கப்பட்ட கட்டிடங்களுக்கு அருகே இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளை நடத்தி அதன் மூலம் தன்னார்வலர்களை ஈர்த்து கட்டிடங்களை சீரமைத்து வருகின்றனர்.

இளைஞர்கள் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் களைப்பு தெரியாமல் உற்சாகத்துடன் பல மணி நேரம் வேலை பார்க்க முடிவதாக தன்னார்வலர்கள் கூறுகின்றனர்.

மேலும் வேலைக்கு நடுவே தாங்களும் பாட்டு பாடி, நடனம் ஆடி உற்சாகம் அடைவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

No comments: