இலங்கையின் பொருளாதார நெருக்கடியைத் தீர்த்து வங்குரோத்து நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்கத் தேவையான நிதியுதவிகளை வழங்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம் தெரிவித்துள்ளது.
ஆனால் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியில் இருக்கும் வரை அந்த நிதியுதவிகளை வழங்க முடியாது என்று சர்வதேச நாணய நிதியம் நிபந்தனை விதித்துள்ளது.
நாடு திவால் நிலையில் இருந்து மீண்டு வருவதற்கு தீர்வாக அப்போதைய நிதியமைச்சர் அலி சப்ரி சர்வதேச நாணய நிதியத்திடம் பல பில்லியன் டொலர் நிதி உதவி கோரியிருந்தார்.
எனினும் அந்த நிதி உதவி கோட்டாபய ராஜபக்ஷ இல்லாத அரசாங்கத்திற்கே வழங்கப்படும் என இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளதாக இன்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று நாடாளுமன்றத்தில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதென உங்களுக்கு தெரியுமா? புதிய அரசாங்கத்திற்கே நாங்கள் உதவுவோம் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
எனினும் தற்போது புதிய வைன் பழைய போத்தல்களில் அடைக்கப்பட்டுள்ளது. இன்னமும் அமைச்சரவை ஒன்று நியமிக்க முடியாமல் போயுள்ளது. கோட்டாபய இல்லாத அரசாங்கம் ஒன்றிற்கே உதவிகள் கிடைக்கும்.
எனினும் தற்போது அரசாங்கம் ஒன்றே இல்லை என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
No comments: