News Just In

5/19/2022 08:11:00 PM

கொழும்பில் மீண்டும் வெடித்த போராட்டத்தால் பதற்றநிலை!

கொழும்பு - புதுக்கடை பகுதியில் மக்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். தமக்கு எரிவாயு வழங்கக் கோரி வீதியை மறித்து நடு வீதியில் டயர்களை எரித்து போராட்டத்தை மேற்கொண்டுள்ள நிலையில், பொலிஸார் போராட்டகாரர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்தாரை தாக்குதல் மேற்கொண்டுள்ள நிலையிஒல் அங்கு பதற்ற நிலை தோன்றியுள்ளது.

இதன்போது மக்கள் கூறுகையில், எமக்கு ரணிலும் வேண்டாம், சஜித்தும் வேண்டாம். மக்கள் சாப்பிட இல்லாமல் இருக்கிறார்கள்.

25 நாட்களாக எரிவாயு வரவில்லை. மண்ணெண்ணெயும் இல்லை. நாங்கள் என்ன செய்வது. உடனடியாக எங்களுக்கு தீர்வு வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து பல்கலைகழக மாணவர் சம்மேளனத்தினர் மீது பொலிஸார் கண்ணீர்புகைபிரயோகம் - நீர்த்தாரை பிரயோகம் என்பன ஆர்ப்பாட்டக்காரகள் மீது பிரயோக்கிக்கப்பட்டது.

கொழும்பு கோட்டையில் உள்ள உலக வர்த்தக மைய கட்டிடத்திற்கு அருகில் வைத்து இவ்வாறு பொலிஸார் பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்தாரை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதன் காரணமாக இலங்கை வங்கி தலைமையகத்திற்கு முன்னால் பதற்ற நிலை தோன்றியுள்ளது.

இதனிடையே, கோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள அரச நிறுவனங்கள், வீடுகளுக்கு சேதம் விளைவிக்க வேண்டாம் என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் வன்முறைச் செயல்களோ அல்லது சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதற்கும் மாணவர்களுக்கு அனுமதி இல்லை என கோட்டை நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.




No comments: