இலங்கையில் அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு இன்று அரச விடுமுறை வழங்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வழமை போன்று நாளை பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பதவி விலகக் கோரி திங்கட்கிழமை முதல் வெள்ளி வரை தொடர் போராட்டம் நடத்தப்படும் என ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இதனால் இன்று பாடசாலை திறக்கப்படாது என வதந்திகள் பரவியதை அடுத்து, அரசாங்கத்தால் விடுமுறை வழங்கப்படவில்லை மற்றும் கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று நடைபெறும் என்று கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments: