கனடாவில் காரில் சென்ற பெண்ணை வழிமறித்து தாக்கி அவரை கடத்துவதற்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 23ஆம் திகதி Chaleur Regionல் இந்த சம்பவம் நடந்துள்ளது.சம்பவம் குறித்து தெரியவருகையில்,
பெண்ணொருவர் காரில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது சாலையில் நின்ற பெண் கையை காட்டி காரை நிறுத்தினார். அதன்பின் தனது வேன் டயரை மாற்ற உதவுமாறு கூற காரில் வந்த பெண்ணும் கீழே இறங்கியுள்ளார்.
அந்த சமயத்தில் அங்கு வந்த இரண்டு ஆண்கள் அப்பெண்ணை தாக்கி தங்கள் வேனுக்குள் இழுத்து செல்ல முயன்றனர்.
ஆனால் அவர்களிடம் இருந்து தப்பிய அவர் தனது வாகனத்தை எடுத்து வேகமாக சென்ற நிலையில் பின்னாலேயே வேனில் துரத்தி வந்த கடத்தல்காரர்கள் , சிறிது நேரத்தின் பின்னர் வேறு வழியாக சென்றுவிட்டனர்.
இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட பெண் ஆங்கிலம் மற்றும் பிரஞ்ச் மொழி பேசுபவர் என தெரியவந்துள்ளது. அத்துடன் அவருடன் இருந்த இரண்டு ஆண்களில் ஒருவருக்கு கண்ணில் காயம் பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடத்தல்காரகள் குறித்து தகவல் தெரிந்தாலோ ஆதார வீடியோ காட்சிகள் எதாவது இருந்தாலோ தங்களை தொடர்பு கொள்ளுமாறு பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
No comments: