இன்று நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள ஹர்த்தாலை முன்னிட்டு வணிக நிறுவனங்களை மூடுமாறு மிரட்டும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
ஹர்த்தாலை முன்னிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்ட சிறிலங்கா காவல்துறை இதனை குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, அமைதியான போராட்டங்களில் ஈடுபடுமாறு பொதுமக்களிடம் சிரேஷ்ட பிரதி காவல் மா அதிபர் அஜித் ரோஹண வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வன்முறையில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments: