கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைக்கும் 2022 ஆம் ஆண்டின் வித்தியாரம்ப நிகழ்வு மிகவும் சிறப்பாக பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். இல்யாஸின் தலைமையில் பாடசாலை வளாகத்தில் இன்று (05) நடைபெற்றது.
பாடசாலை நிறைவேற்றுக் குழு ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலக (திட்டமிடல்) பிரதிக்கல்வி பணிப்பாளர் ஏ.எம். ஹசீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிகளாக ஸ்ரீலங்கா டெலிகொம்- மொபிடல் பொறியியலாளர் திருமதி ஏ.எல். இஸ்ஸத் டில்ஷான் மற்றும் மொராட்டுவ பல்கலைக்கழக விரிவுரையாளர் திருமதி என்.எப். சப்ரினா ஆகியோர் கலந்து கொண்டு வித்தியாரம்ப நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.
இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
நூருல் ஹுதா உமர்
No comments: