நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் இன்று தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு முன்பாக நேற்றைய தினம் ஆர்ப்பாட்ட பேரணியினை ஆரம்பித்த மாணவர்கள் நாடாளுமன்றத்தின் நுழைவுப் பகுதியான பொல்துவ சந்தியில் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
இதனையடுத்து அவர்கள் மீது பொலிஸாரால் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து அங்கு கூடாரங்களை அமைத்து மாணவர்கள் தங்கியிருந்து போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
இந்தநிலையில், இன்றைய தினம் மீண்டும் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்ததுடன், தடைகளை மீறி நாடாளுமன்ற வளாகத்திற்குள் பிரவேசிக்க முற்பட்ட போது, அதனை தடுப்பதற்காக பொலிஸாரால் அவர்கள் மீது கண்ணீர்புகை மற்றும் நீர்த்தரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
அதேநேரம், நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை பிற்போடப்பட்ட நிலையில், மாணவர்களும் தங்களது போராட்டத்தினை எதிர்வரும் 17 ஆம் திகதி வரையில் தற்காலிமாக கைவிட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments: