நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை இன்றுடன் (புதன்கிழமை) முடிவுக்குக் கொண்டுவர தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.தேசிய தொழிற்சங்க நிலையத்தின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
காலி முகத்திடலில் இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் தொடர்ச்சியாக பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments: