தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் முத்திரை கட்டணச் சலுகையை உடனடியாக இரத்துச் செய்ய வேண்டுமெனவும் இல்லையேல் தபால் திணைக்களம் சலுகையை செலுத்த நேரிடும் எனவும் இலங்கை தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், மாகாண சபை உறுப்பினர்களுக்கும் முத்திரை கட்டணம் வழங்கப்படும் எனவும் இதன் காரணமாக மாகாண சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் முத்திரைச் சலுகை நிறுத்தப்பட வேண்டுமென சங்கத்தின் தலைவர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினருக்கு வருடத்திற்கு 375,000 ரூபா பெறுமதியான முத்திரைகள் வழங்கப்படுவதாகவும், இந்த முத்திரை முறையின் கீழ் முதலில் இயந்திரம் மூலம் கடிதத்தின் முத்திரை பதிவு செய்யப்பட்டதாகவும், தற்போது அந்த முறை ரத்து செய்யப்பட்டு நேரடியாக முத்திரைகள் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நேரடியாக தபால் முத்திரைகள் வழங்கப்படுவதால் வருடாந்தம் பெருமளவிலான பணத்தை தபால் திணைக்களம் இழப்பதாகவும், மாகாணசபை உறுப்பினர் ஒருவர் வருடத்திற்கு 60,000 ரூபா முத்திரைச் சலுகையைப் பெறுவதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பொதுச் சேவை நடவடிக்கைகளுக்காகவே இவ்வாறு முத்திரை நிவாரணம் வழங்கப்படுவதாகவும், ஆனால் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த முத்திரை ஏனைய காரணங்களுக்காக பயன்படுத்துவதால், முத்திரைகள் அத்தியாவசியமானால் அவற்றை அறவிடுவதற்கான முறைமையொன்றை உருவாக்க வேண்டும் எனவும் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
No comments: