கொழும்பில் உள்ள சில பகுதிகளுக்கு எதிர்வரும் சனிக்கிழமை (21-05-2022) இரவு 10 மணி முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (22-05-2022) காலை 8 மணி வரை 10 மணி நேரம் நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கொழும்பு 12, 13, 14 ஆம் மற்றும் 15 பிரதேசங்களில் நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என்பதுடன் கொழும்பு 1 மற்றும் 11 பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்ததுடன் நீர் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரிய கொழும்பு நீர் மற்றும் வடிகாலமைப்பு முகாமைத்துவ கட்டமைப்பை மேம்படுத்தும் முதலீட்டு வேலைத்திட்டத்தின் கீழ் நீர் விநியோக கட்டமைப்பில் அத்தியவசிய நவீனமயப்படுத்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதால், இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
No comments: