பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜகத் அல்விஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டார்
காலி முகத்திடல் போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்த வருபவர்களுக்கு கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொள்ள வேண்டாம் என பொலிஸ் மா அதிபர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பணிப்புரை விடுத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பத்திரன நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .இதனை தொடர்ந்து கொழும்பில் போராட்டத் தளங்கள் மீது இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அவர் இராஜினாமாவை அறிவித்துள்ளார்
No comments: