பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதிக்கு பின்னர் புதிய தலைவரொருவர் உதயமாகவுள்ளதாகவும், அதன் பின்னர் நாட்டில் பல பாரிய எழுச்சிகள் ஏற்படும் எனவும் பிரபல ஜோதிடர் கல்யாணி ஹேரத் மெனிகே தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் ஜாதகம் கும்பம் என்றழைக்கப்படும். இலங்கையின் அடையாளம் கும்பம் ஆகும். சனி இப்போது இந்த கும்ப இராசியில் இருக்கின்றார். பொதுவாக இராசியில் இருக்கும் சனி கொடியது. நாட்டை ஆளும் தலைவனுக்குக் கொடியது.
பொருளாதார நெருக்கடி காரணமாக தற்போதைய அரசாங்கம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்ற நிலையில், நெருக்கடிகள் மற்றும் எதிர்காலத்தில் அரசியல் களத்தில் பல மாற்றங்கள் ஏற்படவுள்ளது.
ஜூலை 6ஆம் திகதி முதல் சனி இந்த விலகி ஜனவரி 19, 2023 முதல் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கி, இந்த நாடு சரியான திசையில் நகரும்.
அதற்கமைய, எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதிக்கு பின்னர் நாட்டிற்கு புதிய தலைவர் ஒருவர் உதயமாகவுள்ளதாகவும்,அதன் பின்னர் நாட்டில் பல பாரிய எழுச்சிகள் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments: