15 ஆண்டுகளுக்கு மேல் பாதுகாப்பு விவகாரங்களை கையாண்ட பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) பாதுகாப்பு அமைச்சினை தன்னிடமிருந்து வேறு ஒருவருக்கு கையளிக்க விரும்புகின்றார்.
கடந்த வியாழக்கிழமை (19-05-2022) புதிய அமைச்சரவை தொடர்பில் பிரதமருடன் ஆராய்ந்தவேளை, ஜனாதிபதி இதனை பிரதமருக்கு தெரிவித்துள்ளார்.
21வது திருத்தமாக 19வது திருத்தம் நிறைவேற்றப்பட்டால் மைத்திரிபால சிறிசேனவிற்கு (Maithripala Sirisena) பின்னர் ஜனாதிபதியொருவர் எந்த அமைச்சரவை பதவியையும் வகிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சர் பதவியை ரமேஷ் பத்திரனவிற்கு (Ramesh Pathirana) வழங்க முன்வந்தார்,
இருப்பினும் அவர் அதனை ஏற்கவில்லை. அதன் பின்னரே அவர் அமைச்சராக பதவியேற்றார்.
அவரது மனதை மாற்றுவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன, அதனை அவர் ஏற்கவிரும்பாவிட்டால் இன்னொரு தெரிவை மேற்கொள்ளவேண்டும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் தொடர்ந்தும் நிதி விவகாரங்களை கையாள்கின்ற போதிலும், வெளிநாட்டு நேரடி முதலீடு பொருளாதார, அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய அமைச்சொன்றை ஏற்படுத்தும் திட்டம் காணப்படுகின்றது.
No comments: