News Just In

5/10/2022 01:54:00 PM

பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தீவிர சிகிச்சைப் பிரிவில்!



மகும்புர பகுதியில் வைத்து தாக்குதலுக்கு உள்ளான பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம ஹோமாகம வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இச்சம்பவத்தில் காயமடைந்த அவரது ஓட்டுநரும் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த தாக்குதலில் குமார வெல்கமவின் ஒரு கையில் காயம் ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குமார வெல்கம தாக்குதலுக்கு உள்ளானதன் பின்னர் சுகவீனமுற்றதன் காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகிறார்.

No comments: