News Just In

5/21/2022 02:16:00 PM

நற்பிட்டிமுனை ஆர்.கே.ஆர். கிண்ணம் : பிளாஸ்டர் விளையாட்டுக் கழகம் சம்பியன் பட்டத்தை தனதாக்கி கொண்டது



நூருல் ஹுதா உமர்

அம்பாறை மாவட்டத்தின் பலம் வாய்ந்த 32 அணிகள் பங்கு பற்றிய அணிக்கு 9 பேர் 5 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியில் சாய்ந்தமருது விளாஸ்டர் விளையாட்டு கழகம் சம்மாந்துறை அல்- ஹுதா விளையாட்டுக்கழகத்தை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை தனதாக்கி கொண்டது

நற்பிட்டிமுனை ஆர்.கே.ஆர். விளையாட்டுக்கழக ஏற்பாட்டில் நற்பிட்டிமுனை பொதுவிளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற ஆர்.கே.ஆர். கிண்ண சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் சம்மாந்துறை அல்- ஹுதா விளையாட்டுக்கழம் மற்றும் சாய்ந்தமருது விளாஸ்டர் விளையாட்டு கழகம் ஆகிய அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சாய்ந்தமருது விளாஸ்டர் விளையாட்டு கழகம் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய சம்மாந்துறை அல்- ஹுதா விளையாட்டுக் கழம் 05 ஓவர்களை சந்தித்து ஏழு விக்கட்டுக்களை இழந்து 40 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டனர். பதிலுக்கு 41 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது விளாஸ்டர் விளையாட்டு கழகம் 4.2 ஓவர்களை மட்டுமே சந்தித்து வெற்றியிலைக்கை அடைந்தனர்.

இந்த சுற்றுத்தொடரின் நாயகனாக விளாஸ்டர் விளையாட்டு கழக அணித்தலைவர் ஏ.என்.எம். ஆபாக் தெரிவு செய்யப்பட்டதுடன் இறுதிப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக விளாஸ்டர் விளையாட்டு கழக சிரேஷ்ட வீரர் எம்.ஜே.எம். தாஜுதீன் தெரிவுசெய்யப்பட்டார். சம்பியன் பட்டத்தை வென்ற சாய்ந்தமருது விளாஸ்டர் விளையாட்டு கழகம்15000/= ரூபாய் பணப்பரிசையும் வெற்றி கேடயத்தையும், இரண்டாம் இடம் பெற்ற சம்மாந்துறை அல்- ஹுதா விளையாட்டுக்கழகம் 7000/= ரூபாய் பணப்பரிசையும் வெற்றி கிண்ணத்தையும் பெற்றுக்கொண்டது.


No comments: