News Just In

5/21/2022 01:58:00 PM

எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்த தீர்மானம்!




ஆர்ப்பாட்டக்காரர்களால் வீதிகள் தடைப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எரிசக்தி அமைச்சில் தற்போது இடம்பெற்று வரும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டுள்ள எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்தார்.
கொள்கை ரீதியில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக எரிபொருள் விநியோகிக்கும் பவுஸர்களுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களினால் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக தகவல் வௌியாகியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரித்திருந்தார்.

ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்..

குறித்த குழுவினர் வீதிகளில் செல்லும் எரிபொருள் பவுஸர்களை வழிமறித்து தமது பிரதேசத்தில் எரிபொருளை இறக்காவிட்டால் தீ வைப்பதாக கூறி அச்சுறுத்துவதாக தகவல் வௌியாகியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்ந்தால், எரிபொருள் பவுஸர் ஊழியர்களின் பாதுகாப்பு கருதி விநியோகத்தை நிறுத்த வேண்டியிருக்கும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: