News Just In

4/02/2022 07:48:00 PM

ஊரடங்குச் சட்ட காலத்தில் இலங்கையிலிருந்து வெளிநாடு செல்லவுள்ள பயணிகளுக்கான அறிவிப்பு!

இலங்கையிலிருந்து வெளிநாடு போகும் அனைத்து பயணிகளும் ஊரடங்குச் சட்ட காலத்தில் தங்களின் விமான பயண ஆவணத்தைக் காண்பித்து விமான நிலையத்துக்குப் பயணிக்கலாம் என சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை தலைவர் அறிவித்துள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகள் ஊரடங்குச் சட்டத்தின் போது தங்கள் வீடுகளுக்குச் செல்ல போர்டிங் பாஸை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை முழுவதும் இன்று மாலை 6 மணியிலிருந்து திங்கட்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதனாலேயே விமான பயணிகளுக்கான இவ்விசேட அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

No comments: