உக்ரைனில் கொல்லப்பட்ட பொதுமக்களின் உடல்களை ஒவ்வொரு ரஷ்ய துருப்புக்களின் தாய்மார்கள் தங்கள் மகன்களின் செயலை பார்க்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார்.
தனது அதிகாரப்பூர்வ டெலிகிராம் சேனலில் வெளியிட்ட உரையில் அவர் இதனை கூறியுள்ளார்.
கிவ்வின் புறநகரில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகளைப் பற்றியும் அவர் இதன் பேசினார்.
கடந்த வாரம் ரஷ்ய துருப்புகள் பின்வாங்குவதற்கு முன்னர், உக்ரைனின் ஆயுதப்படைகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு பிரிவுகளுக்கு எதிராக போரை நடத்திய தலைநகருக்கு வடக்கே உள்ள பல நகரங்களில் ஏராளமான சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
புச்சா, இர்பின் மற்றும் ஹோஸ்டோமலில் கொல்லப்பட்டவர்களின் உடல்களை ஒவ்வொரு ரஷ்ய துருப்புகளின் ஒவ்வொரு தாயும் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
அமைதியான நகரத்தில் அப்பாவி பொதுமக்கள் ஏன் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள்? என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேள்வியெழுப்பினார்.
குழந்தைகள் முன்னிலையில் பெண்களை எப்படி பலாத்காரம் செய்ய முடியும்? அவர்களின் காதணிகள் பிடுங்கப்பட்ட பிறகு எப்படி அவர்கள் கழுத்தை நெரிக்க முடியும்? உக்ரேனிய நகரமான புச்சா மக்கள் உங்களுக்கு என்ன செய்தார்கள்?
ரஷ்ய துருப்புக்களின் தாய்மாரை விளித்து பேசிய அவர், “உங்களின் குழந்தைகளுக்கு இதயம் இல்லை, ஆன்மா இல்லை, வேண்டுமென்றே, மகிழ்ச்சியுடன் கொலை செய்தார்கள்” என்று கூறினார்.
No comments: