News Just In

4/29/2022 08:11:00 PM

மோட்டார் சைக்கிள் விபத்தில் யாசகர் பலி; இருவர் படுகாயம்!

மோட்டார் சைக்கிள் விபத்தில் யாசகர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனை பிரதான வீதியில் இன்று (29) அதிகாலை 2 மணியளவில் நடைபெற்ற விபத்திலேயே யாசகர் ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நடக்க முடியாத நிலையில் வாழ்ந்து வந்த குறித்த யாசகர் வீதியோரம் தூங்கிக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்த மூன்று இளைஞர்கள் யாசகர் மீது மோதியுள்ளனர்.

மோட்டார் சைக்கிள் யாசகரின் தலைப் பகுதியில் ஏறியதில் யாசகர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு இளைஞன் தப்பிச் சென்றுள்ளதுடன் இருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மரணமடைந்த 41 வயதுடைய யாசகரின் உடல் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, பிரதே பரிசோதனையின் பின்னர் உடல் இன்று பிற்பகல் மூன்று மணியளவில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இவ் விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(எச்.எம்.எம்.பர்ஸான்)

No comments: