News Just In

4/02/2022 04:30:00 AM

வெடிக்கும் போராட்டம்! தீப்பந்தங்களுடன் நள்ளிரவில் வீதியில் இறங்கிய மக்கள்


கொழும்பு - விஜேராம பகுதியில் அரசாங்கத்திற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.அரசாங்கத்திற்கெதிரான மக்கள் போராட்டமானது மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் இன்றும் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில்,கொழும்பு - விஜேராம பகுதியில் அரசாங்கத்திற்கு எதிராக நள்ளிரவில் தீப்பந்தங்களுடன் வீதியில் இறங்கி மக்கள் போராட்டமொன்றினை முன்னெடுத்துள்ளனர்.

எரிவாயு, எரிபொருள் மற்றும் மின்சார தட்டுப்பாட்டுக்கு தீர்வு கோரியும், தற்போதைய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

No comments: