News Just In

4/26/2022 05:59:00 PM

நான் பதவி விலக மாட்டேன் : அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மஹிந்த உறுதி!




தான் ஒரு போதும் பதவி விலகமாட்டேன் எனவும் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார் 



அலரிமாளிகையில் இன்று (26) இடம்பெற்ற அமைச்சர்களுக்கும் மாகாண சபை உறுப்பினர்களின் ஒன்றியத்துக்கும் இடையிலான சந்திப்பின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவோ அல்லது அரசாங்கமோ பதவி விலகக்கூடாது என மாகாண சபை உறுப்பினர்களின் ஒன்றியம் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியது.

இதற்கு பதிலளித்த பிரதமர் மஹிந்த, தான் பதவி விலக போவதில்லை என்றும் அது குறித்து அச்சம் கொள்ள வேண்டம் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: