News Just In

4/03/2022 11:57:00 AM

ஊரடங்கிற்கு மத்தியிலும் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!


கொழும்பு, மார்க்கஸ் பெர்ணான்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்திற்கு அண்மையில் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷடி சில்வா, சரத் பொன்சேகா, நளின் பண்டார, கபிர் காசிம், ஹக்கீம், முஜீப்பு ரகுமான், ராஜித சேனாரத்ன, மனோ கணேசன், மனுச நாணயக்கார, ரஞ்சித் மத்துமபண்டார, வடிவேல் சுரேஸ் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் ஜனநாயகத்தை நிலைநிறுத்துமாறு கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இதேவேளை கலந்துகொண்டவர்கள் வெள்ளை நிறத்திலான ஆடையை அணிந்திருந்தமை குறிப்பிடதக்கது.

No comments: