News Just In

4/03/2022 12:02:00 PM

சமூக ஊடங்களை முடக்குவதை ஏற்றுக்கொள்ளமாட்டேன் – நாமல்!



சமூக ஊடகங்களை முடக்கும் முடிவை அதிகாரிகள் மீள்பரிசீலனை செய்யவேண்டும் என அமைச்சர் நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும் ‘சமூக ஊடங்களை முடக்குவதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்றதோடு (VPN) கிடைப்பது தற்போது நான் பயன்படுத்துவதுபோல அவ்வாறான தடைகளை முற்றாக அர்த்தமற்றதாக்கிவிடுகின்றது“ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை “அதிகாரிகள் முற்போக்கான விதத்தில் சிந்திக்கவேண்டும் , என்பதோடு முடக்கும் முடிவை மீள்பரிசீலனை செய்யவேண்டும்“ எனவும் தெரிவித்துள்ளார்.

 இதற்கு பதிலிட்டுள்ள டிலித் ஜயவீர
“ நீங்கள் டிஜிட்டல் அமைச்சர் தானே ? இதை உங்கள் அங்கிளுக்கு சொல்ல முடியாதா ? என்று கேள்வி கேட்டு பதிலிட்டுள்ளார்.

இந்நிலையில் இதற்கு பதிலிட்டுள்ள அமைச்சர் நாமல்

“ நான் ஏற்கனவே எனது கருத்தை தெரிவித்துள்ளேன். எவ்வாறு இருந்தாலும் நீங்களும் எனது அங்கிளின் சிறந்த நண்பரல்லவா நீங்களும் செல்லலாம் ” என டிலித் ஜயவீரவின் கேள்விக்கு பதிலிட்டுள்ளார்.

No comments: