News Just In

4/05/2022 07:52:00 PM

இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட சவப்பெட்டியை ஏந்திய ஆர்ப்பாட்டம்!

விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆட்சி குறையக் கோரியும் கடந்த சில நாட்களாக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.

மலையகத்தில் நேற்றும் இன்றும் இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்துக்கும் அரசாங்கத்துக்கும் எதிர்ப்புத் தெரிவித்து இன்று கொட்டகலையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சவப்பெட்டியை உயர்த்தி ஏந்தியும், ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.

சவப்பெட்டிகளை ஏந்திய ஆர்ப்பாட்டக்காரர்கள் கொட்டகலை புகையிரத நிலையத்திலிருந்து கொட்டகலை புகையிரத கடவை நோக்கி பேரணியாக சென்று, சவப்பெட்டியை சிதறடித்து, நாட்டின் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களை வெளியேறுமாறு வலியுறுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கொட்டகலை பிரதேசத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள், இளைஞர்கள், யுவதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

No comments: