News Just In

4/05/2022 07:38:00 PM

காளான் உற்பத்தி மற்றும் பெறுமதிசேர் உணவு உற்பத்தி தொடர்பான ஒருங்கிணைந்த விழிப்பூட்டல் நிகழ்வு!

மட்டக்களப்பு மாவட்ட விவசாயத்திணைக்களத்தின் ஏற்பாட்டில் பிரதேச தொழில்நுட்ப உத்தியோகத்தர் திரு தி.மயூராஜனன் தலைமையில் கிரான் பிரதேசத்தில் காளான் உற்பத்தி மற்றும் பெறுமதிசேர் உணவு உற்பத்தி தொடர்பான ஒருங்கிணைந்த விழிப்பூட்டல் நிகழ்வு இன்று (05.04.2022)  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் திரு V.பேரின்பராஜா, உதவிவசாயப்பணிப்பாளர் திரு.S.சித்ரவேல் பாடவிதான உத்தியோகத்தர் திருமதி K.ரவிசங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன் போது காளான் வளர்ப்பின் அறிமுகம் உதவி விசாயப் பணிப்பாளரினாலும் காளான் உணவின் மருத்துவ நன்மைகள் மற்றும் போசனை பெறுமதி தொடர்பாக பிரதி விவசாயப் பணிப்பாளரினாலும் எடுத்து கூறப்பட்டது. 

பின்னர் விருட்சம் காளான் உற்பத்தி மற்றும் உணவுத்தயாரிப்பு தொடர்பான பயிற்சிகள் கிழக்கு பல்கலைக்கழக விவசாயப்பிரிவு மாணவிகளான செல்வி M.தேனுஜா, செல்வி S.கீர்த்திகா அவர்களினால் செயல் முறை விளக்கங்களுடன் எடுத்துரைக்கப்பட்டது. பின்னர் விருட்சம் காளான் உற்பத்தியாளர் சங்கத்திற்கு பெறுமதி சேர் உணவு உற்பத்தியினை ஊக்குவிக்கும் முகமாக மின் அரைக்கும் இயந்திரம் ஒன்று மானியமாகவும் 46 பயனாளிகளிற்கு மூன்று லட்சத்து முப்பத்து மூவாயிரத்து ஐந்நூறு ரூபாய் பெறுமதியான காளான் உற்பத்தி உள்ளீடுகள் ஐம்பது வீத மானிய அடிப்படையிலும் பிரதி விவசாயப்பணிப்பாளரினால் வழங்கி வைக்கப்பட்டது. 

மேலும் இந் நிகழ்வில் கோரளைப்பற்று பிரதேச செயலக விவசாயப்பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திருமதி K.கிருஜா , திருமதி N.சுகிர்தமணி விவசாயப்போதனாசிரியர்களான திரு K.நிசாந்தன் திரு S.ஶ்ரீறிகண்ணன் திரு P.ரவிவர்மன் திரு MIM.ஜமால்தீன் தொழில்நுடப உத்தியோகத்தர்களான திரு S.மனோதர்சன் திரு K.விஜிதரன் திரு A.அனோஜன் திருமதி J.டோதரன் ஆகியோரும் விருட்சம் காளான் உற்பத்தியாளர் சங்க தலைவர் செயலாளர் பொருளாளர் உறுப்பினர்கள் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.











No comments: