மகிழ்ச்சியாக நேரத்தைக் கழிப்பதற்காகவே காலி முகத்திடலில் இளைஞர்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் எனவும், தகுதியான காரணத்திற்காக அல்லவெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “போராட்டங்களுக்கு இளைஞர்கள் திரண்டதன் நோக்கம் கேள்விக்குறியாக உள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் முக்கியத்துவம் இல்லாத கூட்டங்களை ஏற்பாடு செய்கின்றனர். எந்தவொரு அரசியல்வாதியும் வேண்டுமென்றே நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு செல்ல முயற்சிக்க மாட்டார்கள்.
அரசாங்கத்தின் தரப்பில் தவறுகள் நடந்துள்ளன, அதை அவர்கள் சரிசெய்ய முயற்சிக்கின்றனர். ஆட்சி அமைப்பதற்கான கட்டமைப்பு இல்லாத நிலையில் நாட்டை பின்னோக்கி செல்ல அனுமதிக்க முடியாது.
இந்நிலையில், காலி முகத்திடலில் நடத்தப்படுவதைப் போலன்றி, ஒரு போராட்டம் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவியை விட்டு வெளியேறினால் நாட்டை ஆள்வது யார் என கெஹலிய ரம்புக்வெல்ல கேள்வி எழுப்பியுள்ளார்.
No comments: