News Just In

4/03/2022 05:53:00 PM

தவணைப் பரீட்சைகளுக்குத் தோற்றும் மாணவர்களை மாத்திரம் பாடசாலைக்கு அழைக்க வேண்டும்!


தவணைப் பரீட்சைகளுக்குத் தோற்றும் மாணவர்களை மாத்திரம் ,நாளை முதல் எட்டாம் திகதி வரை பாடசாலைக்கு அழைக்க வேண்டும் என்று கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.அனைத்து கல்விசார் ஊழியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் பணிக்கு சமூகமளிக்க வேண்டும்.

ஆரம்ப பிரிவு மாணவர்களை பாடசாலைக்கு அழைக்கத்தேவையில்லை. இதே போன்று இதுவரையில் தவணை பரீட்சையை நிறைவு செய்த மாணவர்களை அழைக்கத்தேவையில்லையென செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதன்படி, தவணை பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களை மாத்திரம் பாடசாலைகளுக்கு அழைக்குமாறு அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

No comments: